Saturday , February 29 2020
Home / State-News / கொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகள்

கொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகள்

கொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகளுக்கு பாதிப்பு இல்லை எனவும், அவர்களை பொது இடங்களில் செல்லக்கூடாது என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
 
சீன நாட்டில் உள்ள ஹீபெய் மாகாணத்திலுள்ள வுகான் நகரில் இருந்துதான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸால் இதுவரை 160 பேர் வரை இறந்துள்ளனர்.
 
மேலும்,பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் சீனாவில் இருந்து நேற்றைக்கு பெங்களூர் வழியாக கோவைக்கு வந்த எட்டுபேரில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேர் கோவை, 2 பேர் பொள்ளாச்சி, சென்னை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா ஒருவர் என விமானம் மூலம் கோவைக்கு வந்துள்ளனர்.
 
விமான நிலையத்தில் வைத்து தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் இல்லை என பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டதையடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து சுகாதாரத்துறை சார்பில் 8 பேரையும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது எனவும், சளி,காய்ச்சல், போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
 
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் பேசும் போது சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் தமிழக உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், சீனாவில் இருந்து வந்த எட்டு பேருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அவர்கள் சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் இருப்பதாக கூறினார். கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு துளி அளவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

About Admin

Check Also

கோவையில் 65 அடி உயரம் 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின் மற்றுமொரு சாதனையை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி நிறுவனம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.