Thursday , July 18 2019
Home / Tamilnadu Police / கொருக்குப்பேட்டை மற்றும் தலைமைச்செயலக குடியிருப்பு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 3 நபர்கள் கைது.

கொருக்குப்பேட்டை மற்றும் தலைமைச்செயலக குடியிருப்பு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 3 நபர்கள் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ழ-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (25.01.2018) கொருக்குப்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பழையவண்ணாரப்பேட்டை, பார்த்த சாரதி 4 வது தெருவில் கண்காணித்த போது அங்கு தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலைப்பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த 1.கலீல்கான்,வ/22, த/பெ.அயூப்கான் எண்.10/21, பார்த்தசாரதி 4 வது தெரு, பழையவண்ணாரப்பேட்டை அவரது தாய் 2.கோரிப், வ/48, க/பெ.அயூப்கான், பார்த்தசாரதி 4 வது தெரு, பழையவண்ணாரப்பேட்டை ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ சீவல் பாக்குகள், 2 கிலோ ஜர்தா பாக்குகள், 2 1/2 கிலோ ஹான்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, ழு-5 தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (25.01.2018) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, கே.எச் ரோடு, அப்பு செட்டி பள்ளி அருகே மாவா விற்பனை செய்து கொண்டிருந்த இந்துமதி, வ/52, க/பெ.சேகர், எண்.96, ஆர்.கே.புரம், அவுசிங் போர்டு, புரசைவாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 1/2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.