Wednesday , June 20 2018
Home / Tamilnadu Police / கொடுங்கையூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.

கொடுங்கையூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஞ-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (01.02.2018) கொடுங்கையூர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் ஆர்.ஆர் நகர். லிங்க் சாலை, டி.எச். சாலை சந்திப்பில் உள்ள பெட்டிக்கடையை கண்காணித்த போது அங்கு அங்கு இருவர் தடை செய்யப்பட்ட மாவா புகையிலைப்பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

அதன்பேரில், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த 1.சுரேஷ், வ/24, த/பெ.சுடலைக்கண்ணன், காந்தி நகர், 5 வது தெரு, கொடுங்கையூர் 2.இளையராஜா, வ/65, த/பெ.தன்ராஜ, எண்.274, ஆர்.ஆர்.நகர், கொடுங்கையூர் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ மாவா மற்றும் ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்னர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *