Wednesday , August 21 2019
Home / Tamilnadu Police / குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை ஆணையாளர் பாராட்டினார்.

குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை ஆணையாளர் பாராட்டினார்.

வடமாநில பெண்ணை கொலை செய்த குற்றவாளி கைது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி, பெ/வ.30 என்பவர் சென்னை, அண்ணாநகர் மேற்கு, 18வது தெரு, H-பிளாக், எண். AP-569 என்ற முகவரியில் கடந்த 2 வருடங்களாக வசித்துக் கொண்டு, உடலில் டேட்டு போடுதல் மற்றும் புடவை வியாபாரம் செய்து வந்தார். இவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கிருஷ்ணபகதூர், வ/26, என்பவருடன் கடந்த 6 மாதமாக மேற்படி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணபகதூர் கடந்த 04.08.2019 அன்று வெளியில் சென்றுவிட்டு பின்னர் இரவு சுமார் 08.00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பிங்கி தரையில் விழுந்தபடி இறந்து கிடந்துள்ளார். உடனே, கிருஷ்ணபகதூர் இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க, V-5 திருமங்கலம் போலீஸார் சம்பவயிடம் சென்று பார்த்தபோது, பிங்கியின் தலை மற்றும் உடலில் இரத்தக்காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவரவே, பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, V-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையாளர் திரு.A.சிவகுமார் தலைமையில், திருமங்கலம் காவல நிலைய ஆய்வாளர் திரு.M.ரவி, உதவி ஆய்வாளர்கள் திரு.K.பாண்டியராஜன், திரு.S.யுவராஜ், தலைமைக்காவலர்கள் G.ரவி (த.கா.18855), T.ஜோசப் (த.கா.20948), E.கண்ணன் (த.கா.26668), முதல்நிலைக் காவலர் A.ஜெயகுமார் (மு.நி.கா.31072), ஊர்க்காவல் படை காவலர் அருள் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்ததில், பிங்கியின் உடலில் வெட்டுக்காயங்கள் மற்றும் முகத்தில் நகக்கீறல்கள் இருந்துள்ளதும், வீட்டிலிருந்த சிறிய பூந்தொட்டி மற்றும் அரிவாள்மனை நெளிந்துள்ள நிலையில் இருந்துள்ளதும் தெரியவந்தது. அதன்பேரில் பிங்கியின் செல்போன் எண்ணை வைத்து, சம்பவ தினத்தன்று பிங்கியை தொடர்பு கொண்ட எண்களை வைத்து விசாரணை செய்ததில், சம்பவ நேரத்தின்போது விகாஷ் என்பவர் பிங்கியை பலமுறை தொடர்பு கொண்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், விகாஷ் என்பவர் பிங்கியின் வீட்டிற்கு பலமுறை வந்துள்ளதும், சம்பவ தினத்தன்று (04.8.2019) மாலை விகாஷ் பிங்கியின் வீட்டிற்கு வந்தபோது, பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்பொழுது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் விகாஷ் பிங்கியின் தலையை பிடித்து சுவற்றில் மோதி, பாத்ருமில் தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் பிங்கியை முக்கி நிலை குலைய செய்து, பின்னர் வீட்டிலிருந்த அரிவாள்மனையால் தாக்கி பிங்கியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
அதன்பேரில், வெளிமாநிலத்திற்கு தப்பிச் செல்ல இருந்த அரியானாவைச் சேர்ந்த குற்றவாளியான S.விகாஷ், வ/23, த/பெ. சத்பால், எண்-B23, CMDA Truck Terminal Complex, GNT ரோடு, பொன்னியம்மன்மேடு என்பவரை மறுநாள் (05.8.2019) கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

டி.பி.சத்திரம் பகுதியில் அழகு நிலையத்தில் புகுந்து பெண் ஊழியரை கத்தியால் தாக்கி நகை பறித்துச் சென்ற 5 குற்றவாளிகள் கைது.
சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகா, வ/27, க/பெ.சக்திகுமார் என்பவர் எண்.126, கே.ஜி.கார்டன் ரோடு, ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு என்ற முகவரியில் உள்ள ப்ளூவேல் சலூன் என்ற அழகு நிலையத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை செய்து வருகிறார். கார்த்திகா கடந்த 04.08.2019 அன்று இரவு சுமார் 08.45 மணியளவில் மேற்படி அழகு நிலையத்தில் வேலை முடித்துவிட்டு மற்ற பெண் ஊழியர்கள் சென்றுவிட்டு, கடையை மூடும் சமயத்தில் சுமார் 5 நபர்கள் அழகு நிலையத்திற்குள் நுழைந்து கார்த்திகாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகைகளை கேட்டுள்ளனர். கார்த்திகா தர மறுக்கவே, 5 நபர்களில் ஒருவர் கத்தியை திருப்பி பிடித்து, கார்த்திகாவின் உடலில்2 இடங்களில் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலி தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் காயமடைந்த கார்த்திகா இது குறித்து K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, அயனாவரம் சரக உதவி ஆணையாளர் (பொறுப்பு : கீழ்ப்பாக்கம் சரகம்) திரு.எம்.பாலமுருகன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் திரு.P.பொன்ராஜ் (G-3 கா.நி.), திரு.R.விநாயகம் (K-6 ச & ஒ), திருமதி.P.சாந்திதேவி (K-6 குற்றப்பிரிவு), சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.V.மனோகரன், தலைமைக் காவலர்கள் S.செந்தில்குமார் (த.கா.35179), B.சுபாஷ் சந்திரபோஸ் (த.கா.28110), முதல்நிலைக் காவலர்கள் S.மகேஷ் (மு.நி.கா.27932), N.பிரபு (மு.நி.கா.28696), காவலர்கள் A.நாகூர் மீரான் (கா.43545) மற்றும் B.மதியழகன் (கா.38043) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணை செய்ததில் குற்றவாளிகள் 5 பேரும் ஒரே ஆட்டோவில் வந்து மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், சம்பவ இடத்தினருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்தில் விசாரணை செய்தும், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோவின் (TN11 AH 2674) பதிவு எண்ணை வைத்தும், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. ராஜேஷ், வ/26, (Electrician) த/பெ சார்லஸ், எண்-24/76, பஜனை கோயில் தெரு , மேற்கு தாம்பரம், சென்னை. 2) திவாகர். வ/22, த/பெ தாஸ்,எண்.32/2, பொன்னுசாமி தெரு, வெற்றி, மென்ஸ் விடுதி, DLF, ராமாபுரம், சென்னை, 3. ராகுல், வ/23, த/பெ சேகர், எண்.35, பஜனைகோயில் தெரு மேற்கு, தாம்பரம் சென்னை , 4.ஹரிகிருஷ்ணன், வ/27 (ஆட்டோ ஓட்டுனர்), த/பெ நாராயணன், எண்.14, வைகை நகர் ஏரிகரை தெரு, மேற்கு தாம்பரம் சென்னை, 5.ஜெயின், வ/23, (கல்லூரி மாணவர்) த/பெ அருண், எண்.11, தெய்வ நகர் 2வது தெரு, மேற்கு தாம்பரம், சென்னை ஆகிய 5 பேரை மறுநாள் (05.8.2019) விடியற்காலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 சவரன் தங்கச்சங்கிலி, கத்திகள்-2 மற்றும் மேற்படி ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த சுமார் 10 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக பணிபுரிந்த திருமங்கலம் மற்றும் கீழ்ப்பாக்கம் சரக உதவி ஆணையாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (07.8.2019) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

About Admin

Check Also

வேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.