குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐ பி எஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் மங்களநடையை சேர்ந்த பிறேமசந்திரன் ஓய்வுபெற்ற சிறப்பு உதவியாளர் இவரது மனைவி ரெஜினாள் இவரது மூத்த மகன் டால்பின் பிரேம் இறகு பந்து பயிற்றுனராக‌ உள்ளார் இரண்டாவது மகள் பிரவீனா 27 வயது இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது போதகர் ஒருவர் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று கூறி ஊக்குவித்து உள்ளார் அப்போதே எண்ணம் மனதில் வைத்து பல புத்தகங்களை படித்து மதுரை தியாகராஜா கல்லூரி Be கம்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து கோயம்பத்தூர் kpr அகாடமி யில் UPSC தேர்வு பயிற்சி பெற்று அங்கேயே மாணவர்களுக்கு பாடம் நடத்தி ஐந்து முறை UPSC தேர்வு எழுதியதில் மூன்று முறை தோல்வி அடைந்தார் நான்காவது முறையாக 2018 ஆம் ஆண்டு IRTS தேர்வானார் லக்னோவில் பயிற்சி நடைபெற்று வரும் நிலையில் ஐந்தாவது முறையாக தேர்வு எழுதி 445 இடம் கிடைத்து குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐபிஎஸ் ஆக தேர்வாகி உள்ளார் இவருக்கு தமிழ், ஆங்கிலம் , ஆகிய மொழிகள் தெரியும், மேலும் இறகு பந்து விளையாட்டில் ஆர்வம், அவர்
பத்திரிகையாளர்களிடம் கூறும்போது.
இந்த முயற்சி ஐந்து வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பலன் மூன்றாம் முறை முயற்சி செய்த போது இவ்வளவு முயன்றபோதும் கிடைக்கல என்று தோன்றியது ஆனாலும் கடின உழைப்பு வெற்றியை கிடைக்க செய்தது ஒரு நாள் பத்துமணி நேரம் படிப்பேன் இரண்டு முறை பயிற்சி எடுத்து விட்டு பாடமும் நடத்தினேன். அப்பா காவல் துறையில் பணியாற்றியதால் அவர் மூலம் உத்வேகம் வந்தது புதிதாக தேர்வு எழுத வருவோர் தயார் எடுப்பதோடு கடின உழைப்பு டன் பயிற்சி எடுக்கவேண்டும் நீட் உட்பட பல தேர்வுகள் கடினமாக இருப்பதாக தேர்வு எழுத செல்லும் முன் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது இது வேதனைக்குரியது கண்டிப்பாக ஒரு தடவை தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் அடுத்த முறை வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும் அப்போது தான் வெற்றி பெற முடியும்
இந்த நம்பிக்கை உங்களுக்கு வந்தால் தான் உங்களை சுற்றி இருப்போருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நம்பிக்கை வரும் தேர்வு வாழ்கை கிடையாது
இதனால் மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை தவிர்க்க முடியும் தமிழ்நாடு அரசு அகில இந்திய குடிமைபணி தேர்வு பயிற்சி மையம் சென்னை அடையாறு அருகே உள்ளது தங்கி படிக்கவும் ஊக்கத்தொகை கொடுத்தார்கள் இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

About admin

Check Also

EDAC Engineering donates classroom furniture to two Government schools in Cuddalore

Chennai: EDAC Engineering Limited, a leading EPC and O&M player and part of AM International, recently …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *