Monday , December 17 2018
Home / Tamilnadu Police / குடிபோதையில் சுமை தூக்கும் தொழிலாளியை காலால் எட்டி உதைத்து கொலை செய்த வழக்கில் மூன்று நபர்கள் கைது.

குடிபோதையில் சுமை தூக்கும் தொழிலாளியை காலால் எட்டி உதைத்து கொலை செய்த வழக்கில் மூன்று நபர்கள் கைது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், வ/55, த/பெ.கோவிந்தசாமி என்பவர் சென்னை கானாத்தூரில் உள்ள ராமு டிரேடர்ஸில் தங்கி மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார். மோகன் கடந்த 19.01.2018 அன்று காலை கானாத்தூர், ஈ.சி.ஆர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த நான்கு நபர்கள் மேற்படி மோகனிடம் வீண் தகராறு செய்து காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் மோகனின் ஆண் உறுப்பு பலத்த காயமடைந்துள்ளது. மோகன் அருகிலுள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மோகன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (22.01.2018) இறந்து விட்டார். இது தொடர்பாக ஜெ-12 கானாத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஜெ-12 கானாத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.இமானுவேல் (எ) ரூபன், வ/48, த/பெ.ஜெயராஜ், எண்.169, ஜம்போடைதெரு, முட்டுக்காடு 2.கார்த்திக், வ/28, த/பெ.துலுக்கானம், எண்.60, இந்திராகாந்தி தெரு, கானாத்தூர் 3.வீரகுமார் (எ) குமார், வ/29, த/பெ.இருளாண்டி, இந்திராகாந்தி தெரு, கானாத்தூர் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள ரமேஷ் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.