Thursday , January 24 2019
Home / District-News / எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாள்.

எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாள்.

திண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கு தேக்வாண்டோ சிறப்பு பயிற்சி .
திண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கு தேக்வாண்டோ சிறப்பு பயிற்சி முகாம் நாகல்நகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் தர்மராஜன் தேக்வாண்டோ வீர்ர்களுக்கு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் 64 மாணவ ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேக்வாண்டோ மாவட்ட செயலாளர் ஜோதிபாசு , முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கினார்கள். மேலும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ ,மாணவிகள் வரும் பிப்ரவரி மாதம் 7 , 8, 9 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டிக்கு கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஏ.டி.தேக்வாண்டோ கிளப் தலைவர் சகுந்தலா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தினர்.

தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தின. தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் இருந்து வந்த இறை வழிபாட்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.