Wednesday , October 16 2019
Home / Tamilnadu Police / எழும்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.

எழும்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், எப்-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று (25.1.2018) அழகு முத்துக்கோன் சிலை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட் அருகே கண்காணித்த போது அங்கு ஒருவர் ஆட்டோவில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த உமாமகேஷ்வரன், வ/58, த/பெ.மீனாட்சிசுந்தரம், 11 வது மெயின் ரோடு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.9,790/-, 1 கால்குலேட்டர், 1 டார்ச்லைட் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட உமாமகேஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.