Friday , November 22 2019
Home / Tamilnadu Police / எழும்பூர் பகுதியில் இளநீர் வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டிய பழைய குற்றவாளி கைது

எழும்பூர் பகுதியில் இளநீர் வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டிய பழைய குற்றவாளி கைது

சென்னை,அயனாவரம், பெரியார் சாலை, எண்.113 என்ற முகவரியில் கதிரேசன், வ/44, த/பெ.ஆத்திமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் எழும்பூர் நெடுஞ்சாலையில் இளநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று (24.02.2018) காலை சுமார் 10.30 மணிளவில் மேற்படி இளநீர் கடைக்கு வந்த இரண்டு நபர்கள், இளநீர் குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட இளநீர் கடை உரிமையாளர் கதிரேசனை மேற்படி இரண்டு நபர்களும் இளநீர் வெட்டும் கத்தியை எடுத்து வெட்டி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இது குறித்து கதிரேசன் எப்-2 எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எப்-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மாறன் (எ) மணிமாறன், வ/23, த/பெ.பிரபு, புதுப்பேட்டை என்பவரை கைது செய்தனர். மற்றொரு குற்றவாளி சண்முகம் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மாறன் (எ) மணிமாறன் எப்-2 எழும்பூர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது எப்-4 ஆயிரம் விளக்கு, எப்-5 சூளைமேடு, எப்-1 சிந்தாதிரிப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளது.

கைது செய்யப்பட்ட மாறன் (எ) மணிமாறன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.