Sunday , July 21 2019
Home / News / இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

IMG_7740-1
கோவை, மே.2 கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவை காந்திபுரத்தில் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் பத்ரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கோட்ட செயலாளர் குணா, மாவட்ட பொதுச் செயலாளர் சசி, மாவட்டச் செயலாளர்கள் ஜெய்சங்கர், கிருஷ்ணன், செய்தித்தொடப்பாளர் தனபால் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்து முன்னணி செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். கடந்த 5 மாதங்களாக அவர்களை கண்டுபிடிக்கவில்லை. ஏரி, குளங்களை தமிழக அரசு தூர்வாரி வறட்சியை போக்க வேண்டும். ஆலயங்களில் சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை மாதம் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

About Ragavendhar

Check Also

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …