Monday , November 18 2019
Home / Tamilnadu Police / அண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.

அண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, டி-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (02.4.2019) காலை மெரினா நீச்சல் குளம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததன் பேரில் இரண்டு நபர்களையும் அண்ணாசதுக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.முகமதுநவாஸ், வ/37, த/பெ.சிராஜுதீன், எண்.30/60, நாகப்பன் தெரு, புதுப்பேட்டை 2.முகமதுரஃபிக், வ/32, த/பெ.அப்துல்ஷேக், எண்.5, ஏகாங்கிபுரம், பெரம்பூர் என்பதுதெரியவந்தது. மேற்படி இருவரும் சேர்ந்து மெரினாவில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை திருடி அதன் உதிரி பாகங்களை தனித்தனியாக கழற்றி விற்பனை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து திருட்டு இருசக்கர வாகனம்-1 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில், இவர்கள் இருவர் மீதும் சென்னை மத்தியகுற்றப்பிரிவு திருட்டுவீடியோ தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மேற்படி குற்றவாளிகள் இருவரும் நேற்று (02.04.2019) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

வேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.