Wednesday , July 17 2019
Home / District-News / அகில பாரத இந்து மகா சபா – தமிழ்நாடு மாபெரும் போராட்டம்

அகில பாரத இந்து மகா சபா – தமிழ்நாடு மாபெரும் போராட்டம்

இந்துக்களின் பறி போன உரிமைகளை மீட்டெடுக்கும் மாபெரும் போராட்டம், இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த பாரத திரு நாட்டில் இந்துக்கள் தற்போது அடிமைகளை விட கேவலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள், இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. சுதந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கு சொந்தமான மண்ணின் மைந்தர்களின் கலாச்சாரம், பண்பாடு, இந்து மதத்திற்கு எதிராக கம்யூனிச சித்தாந்தவாதிகள், கிறித்துவர்கள், இஸ்லாமியவாதிகள் போன்றோர்களால் நாத்திகம், திராவிடம், மொழி எதிர்ப்பு என்ற பெயரால் இந்து தர்மம் நசுக்கப்படுகிறது, இந்துக்களின் உரிமை பறிக்கப்படுகிறது? பெரும்பான்மையான இந்துக்களின் மதவழிபாட்டு முறைகள், வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுகிறது. பெரும்பான்மையான இந்துக்கள் தனக்கு சொந்தமாக கல்வி நிலையங்கள் உருவாக்குவதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் திருக்கோவில்களை பராமரிக்க முடியாமலும், திருக்கோவிலின் சொத்துக்களை மீட்க முடியாமலும்,தொன்மை வாய்ந்த நமது பண்பாட்டு சின்னங்கள், கடவுள் திருமேனி சிலைகள் களவாடப்படுகிறது. தனக்குரிய கடவுளை இலவசமாக தரிசிக்க முடியாது, அதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது, இந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, மதவழிபாடு போன்றவற்றில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துக்களுக்கு எதிராக உள்ளது, இந்துக்கள் இதுவரை அடிமையாக இருந்தது போதும், இந்துக்கள் அடிமையுமல்ல, அந்நியர்களுமல்ல! இந்துக்கள் தங்கள் உரிமைகளை இழந்து நிற்க, இது ஒன்று மாற்றான் தேசமும் அல்ல… இது இந்துக்களின் சொந்த தாய் நாடு, தந்தை நாடு, புனித நாடு, இங்கு இந்துக்களின் உரிமை மறுக்கப்படுவது நியாயமல்ல… அதற்கு முதல் படியாக டிசம்பர் 17 அன்று இந்துக்களின் பறிபோன அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்க மாபெரும் போராட்டத்தின் மூலமாக அரசுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்துக்களின் காவலன் என்று சொல்லக் கூடிய இந்து அசியல் தலைவர்களுக்கும் ஜனநாயக வழியில், அரசியல், ஆன்மீகம், வழிபாடு, சமூக பொருளாதார, கல்வி பேச்சு, எழுத்து, கலாச்சார, பண்பாடு உரிமைகளை மீட்டெடுக்க அணி திரள்வீர்!

About Admin

Check Also

Bharatanatyam Performance by Augrima Ghosh & Shipra

Chennai, July 09, 2019: A centuries-old dance form that originated from Tamil Nadu, Bharatanatyam is …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.