Saturday , February 24 2018
Home / District-News / எஸ்.டி.பி.ஐ. கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் SDPI கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதா  என்ற போலி பேயரில் முஸ்லிம் தனியார் சட்டத்தை அழிக்கத்துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் குற்றச்சாட்டு முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பா.ஜ.க. அரசு நிறைவேற்ற முயற்சிக்கும் முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக எஸ்.டி.பி.ஜ.கட்சி நாடு முழுவதும் பெண்கள் கலந்து கொள்ளும் போராட்டங்களை நடத்தி வருகின்றது. தமிழகத்திலும் கடந்த பிப்.7.8.9. ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஜ. கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில தலைவி M. நஜ்மா பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். எஸ்.டி.பி ஜ.கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம் முஹம்மது இஸ்மாயில் .நேஷனல், விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் தஸ்லீமா.கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் ஆயிஷா சித்தீக்கா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும்.எஸ்.டி.பி.ஜ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, அச. உமர் பாரூக் ரத்தினம் . மாநில பொருளாளர் முகைதீன், எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் முகமது பாரூக் மற்றும் சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு. முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினர். இதில் பலர் கலந்து கொண்டர்கள்.

About Admin

Check Also

Cricket Canada becomes first Associate member to set in motion the creation of T20 franchise league in the lucrative North America market

Chennai , February 2018: Cricket’s original home was always Canada because the sport was first …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *