Tuesday , August 21 2018
Home / District-News / OPS உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்கள் மாபெரும் ஆதரவு

OPS உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்கள் மாபெரும் ஆதரவு


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 9 மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் திரண்டனர்.

இதையடுத்து 9.15 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். உடனடியாக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி.பிரபாகர், மயிலை ராஜலட்சுமி மற்றும் நடிகர் மனோபாலா, தலைமை கழக பேச்சாளர்கள் சிந்தை ஆறுமுகம், டாக்டர் அழகு தமிழ்செல்வி, வக்கீல் செல்வம், டாக்டர் சுனீல், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ரெட்சன் சி.அம்பிகாபதி, ராயபுரம் அறிவழகன் சண்முகம் உள்பட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

10 மணிக்கு பிறகும் உண்ணாவிரத பந்தலுக்கு அ.தி.மு.க.வினர் சாரை, சாரையாக வந்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் நடை பெறும் எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே நீண்ட சாம்யானா பந்தல் போடப்பட்டு அதில் தொண்டர்கள் அமர்ந்தனர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே, அங்கு இடம் போதவில்லை.

அதை தொடர்ந்து தொண்டர்கள் ரோட்டிலும் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் பெண்கள் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை பார்த்து வணங்கிவிட்டு அமர்ந்தனர். அவ்வப்போது பன்னீர் செல்வமும் எழுந்து தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி இருந்தார். உண்ணாவிரதத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தொண்டர்கள் தெரிவித்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

About Ragavendhar

Check Also

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு

சென்னை தலைமை செயலகம்  முன்பு 16.08.2018  காலை தூத்துக்குடி ஸ்டெர்லைட்  தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரி  பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார …