Monday , May 20 2019
Home / City Union Bank Limited announced 4 th Quarter, Financial year 2016-17

City Union Bank Limited announced 4 th Quarter, Financial year 2016-17

சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 13% உயர்ந்து ரூ 503 கோடியாக உள்ளது என அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் காமக்கோடி கூறினார்.

வங்கியின் 2016 -2017 ஆம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு மற்றும் வருடாந்தர கணக்கு முடிவுகள் குறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வங்கியின் மொத்த வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 12% உயர்ந்து, ரூ.54,228 கோடியாக இருந்தது. வைப்புத் தொகை 11 சதவீதமும், கடனளிப்பு 13 சதவீதமும் அதிகரித்தது. மொத்த லாபம் 19% உயர்ந்து ரூ.994 கோடியாகவும், நிகர லாபம் 13% உயர்ந்து ரூ.503 கோடியாகவும் உள்ளது.

நிகர வட்டி வருவாய் 22% அதிகரித்து ரூ.1,199 கோடியை எட்டியது. மொத்த வாராக் கடன் விகிதம் 2.83 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.71 சதவீதமாகவும் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 25 புதிய கிளைகள், 170 ஏ.டி.எம்.கள் தொடங்கப்பட்டன. தற்போது மொத்த கிளைகள் எண்ணிக்கை 550, ஏ.டி.எம்.கள் எண்ணிக்கை 1,486 என்றார் அவர்.

சிட்டி யூனியன் வங்கியின் நிகர வட்டி வருமானம் 22% உயர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஏ.டி.எம். கார்டு இல்லாமல் குறிப்பிட்ட ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் காமக்கோடி தெரிவித்த்தார்.

வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு சிட்டி யூனியன் வங்கியின் அனைத்து கிளைகளிலும் ரோபோ வசதி விரைவில் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வங்கிக்கு நேரடியாக செல்லாமல் ஆதார் எண்ணைக் கொண்டு சுலபமாக,  இணைய தளம் மூலமாக  வங்கிக்கணக்கு தொடங்கும் முறையை காமக்கொடி அறிமுகப்படுத்தினார். வாடிக்கையாளரின் நிதி நிர்வாகத்தைக் கணிக்க உதவும் சேவை, வாடிக்கையாளர்கள் “சாட் பாத்’ எனப்படும் வசதி மூலம் ஆன்லைனில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பெறும் சேவை என 3 புதிய சேவைகளைத் தொடங்குவதாக அவர் அறிவித்தார்.

About Ragavendhar

Check Also

Tamil Nadu Requires Positive Politics to Lead Change

Chennai, May 2019: CK Kumaravel echoed a positive spirit of “yes we can.” Yes we …