Saturday , January 20 2018
Home / Tamilnadu Police (page 4)

Tamilnadu Police

ஐ.சி.எப் பகுதியில் ஆட்டோவை திருடிய சகோதரர்கள் இருவர் கைது ஆட்டோ பறிமுதல்.

சென்னை, ஐ.சி.எப், கக்கன்ஜி நகர், எண்.83 என்ற முகவரியில் ஆட்டோ ஓட்டுநர் சிட்டிபாபு, வ/38, த/பெ.சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 01.12.2017 அன்று இரவு கடந்த தனது ஆட்டோவை (கூசூ 05 ஹநு 3378) வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்குச்சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி ஆட்டோவை யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிட்டிபாபு கே-7 ஐ.சி.எப் காவல் நிலையத்தில் கொடுத்த …

Read More »

திருநின்றவூர் பகுதியில் பெண்ணை கேலி செய்த இரண்டு நபர்கள் கைது.

சென்னை, திருநின்றவூர், கொசவன்பாளையம், பஜனைகோயில் தெரு, எண்.270 என்ற முகவரியில் ரமணி வ/45, (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்பவர் தனியாக வசித்து வருகிறார். ரமணி கடந்த 29.11.2017 அன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாபு (எ) ஜெயக்குமார், சுரேஷ் ஆகிய இருவர் மேற்படி ரமணியை கேலி, கிண்டல் செய்து அவதூறாக பேசியுள்ளனர். இது குறித்து ரமணி டி-11 திருநின்றவூர் …

Read More »

ஓட்டேரி பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது. 3 செல்போன்கள் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் .

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ப்பி-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (27.11.2017) மதியம் சுமார் 01.30 மணியளவில் …

Read More »

கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.

சென்னை, கோயம்பேடு, சேமாத்தம்மன் கோயில் தெரு, 1வது செக்டாரில் கதவு எண்.52 என்ற முகவரியில் திரு.பிலால், வ/38, த/பெ.முஸ்தபா என்பவரும், கதவு எண்.168 என்ற முகவரியில் திரு.அரசன், வ/30, த/பெ.துரைசாமி என்பவரும் வசித்து வருகின்றனர். பிலால் மற்றும் அரசன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான கார்களை இவர்களது வீட்டு தெருவில் உள்ள பாய்ஸ் கிளப் அருகில் 26.11.2017 அன்று இரவு நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் (27.11.2017) காலை 10.00 மணியளவில் பிலால் மற்றும் …

Read More »

செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். அதன்பேரில், எம்-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (27.11.2017) செங்குன்றம் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த …

Read More »

5 சவரன் போலி தங்க செயின், ரூ.80 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, தண்டையார்பேட்டை, தாண்டவராயன் கிராமணி தெருவில் சஞ்சய் ஜீவல்லர்ஸ் என்ற பெயரில் காலுராம், வ/45, த/பெ.தன்ரராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று (26.11.2017) இரவு சுமார் 8.00 மணியளவில் மேற்படி கடைக்கு தங்க நகையை அடகு வைக்க வந்த நபர் போலியான தங்க நகையை அடகு வைக்க முயன்ற போது கடையின் உரிமையாளர் சுதாரித்துக்கொண்டு தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் …

Read More »

மணலி பகுதியில் கண்டெய்னர்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது. 2 கண்டெய்னர்கள் பறிமுதல்.

சென்னை மணலி புதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விச்சூர் பகுதியில் உள்ள சத்துவா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் நமச்சிவாயம், வ/ 45, த/பெ.முனிரத்தினம் என்பவர் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தங்களது நிறுவனத்தில் கிரேன் ஆப்ரேட்டர்களாக வேலை செய்து வரும் சதீஷ், சேகர் ஆகிய இருவர், நிறுவனத்திற்கு சொந்தமான 20 அடி நீளமுள்ள 2 கண்டெய்னர் பெட்டிகளை திருடி விற்பனை செய்து விட்டதாகவும், அவர்கள் மீது …

Read More »

கே-11 சி.எம்.பி.டி காவல் நிலைய எல்லையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது.

சென்னை, கோயம்பேடு, தெற்குமாடவீதி, எண்.13/37 என்ற முகவரியில் சசிகுமார், வ/27, த/பெ.கருப்பையா என்பவர் தனது மாமா பழனிச்சாமி என்பவருடன் வசித்து வந்தார். மேற்படி இருவரும் சேர்ந்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். கடந்த 13.11.2017 அன்று இரவு சசிகுமார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சசிகுமாரிடம் தகராறு செய்து அவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து …

Read More »

57 வது மாநில அளவிலான காவல் துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆண் பெண் அமைச்சுப்பணியாளர்கள் காவல் ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

57 வது மாநில அளவிலான காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி கடந்த 27.10.2017 முதல் 29.10.2017 வரை திருப்பூர் மாவட்டத்தில்  நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் பல்வேறு காவல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல் சிறப்பு பிரிவுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல் அமைச்சுப்பணியாளர்கள் வாலிபால், இறகுப்பந்து, டேபிள்டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர். மேலும் கேரம், …

Read More »

எண்ணூர் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது. 19 கிலோ மாவா மற்றும் 100 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, எம்-5 எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (13.11.2017) காலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, …

Read More »