விநாயகர் சதுர்த்தி தடை இந்துக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி

சிவசேனா சார்பில் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறத. இந்த விழா இந்துக்களின் நம்பிக்கை, ஒற்றுமை, எழுச்சியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டத்தை பல கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் பல ஆண்டுகளாக திட்டமிட்டே குறைத்து வருவதாகவும், இது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக கருதபடுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சில விதிமுறைகளுடன் அனுமதிக்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்ததை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு கோயில்கள் திறக்க அனுமதி அளித்ததைப் போன்று அனைத்து கோயில் திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோவிலை திறக்க அனுமதிக்கப்படாத தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதன் மூலம் கொரோனா தொற்று உயிரிழப்புகள் மற்றும் சமூக அவல பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது சிவசேனா நிர்வாகிகளான மாநில ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி சேதுபதி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, சென்னை மாநகர வழக்கறிஞர் அணி பிரிவுத் தலைவர் மணிவேல், சென்னை மண்டல தலைவர் சிவபிரபு, வடசென்னை மாவட்ட செயலாளர் செல்வா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சக்திவேல், திருவள்ளூர் மாவட்ட தலைவர் குமார், தென் சென்னை மாவட்ட தலைவர் வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் மோனேஷ், தென்சென்னை மாவட்ட செயலாளர் பிரபு ,திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாராயணன், திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் கலை வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

About admin

Check Also

சாமானிய மக்கள் முற்றிலுமாக ரயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்

இந்திய ராயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எஸ்.ஆர்.எம்.யூ பொது செயலாளர் என்.கண்ணையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *