Saturday , April 21 2018
Home / District-News / 65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம் முதலமைச்சர் வழங்கினார்

65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம் முதலமைச்சர் வழங்கினார்

cmawards12052017-big
தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், கைவினைஞர்கள் திறன் தொடர்பான தகவல்கள் அடங்கிய வலைதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள கைவினைஞர்கள் பற்றி அனைத்துத் தகவல்களையும் சேகரித்து தனி வளைதலம் உருவாக்கிட அரசு 2015-16-ம் ஆண்டில் தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் சுமார் 2 லட்சம் பேரை பற்றிய தகவல்களை திரட்டி, வலைதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. இதுவரை 10 ஆயிரம் கைவினைஞர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 500 பேர் பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தை முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும், 2016-17-ம் ஆண்டுக்கான வாழும் கைவினை பொக்கிஷம் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், ஒரு தாமிர பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றையும் 2016-17-ம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறந்த கைவினைஞர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், ஒரு தாமிர பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. பெஞ்சமின், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், கைத்தறி மற்றும் கைத்திறன் முதன்மைச் செயலாளர் திரு. பணீந்தர ரெட்டி, கைத்திற தொழில்கள் வளர்ச்சிக்கழகத் தலைவர் திரு. சந்தோஷ்பாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Ragavendhar

Check Also

Vanshika Verma Khare’s Book ‘Playing Keyboard Made Easy’ Provides Chords and Notations of Evergreen Bollywood Songs

Chennai: Notion Press, India’s fastest growing self-publishing company has published an interesting book ‘Playing Keyboard …