Friday , December 15 2017
Home / Tamilnadu Police / 5 சவரன் போலி தங்க செயின், ரூ.80 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

5 சவரன் போலி தங்க செயின், ரூ.80 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, தண்டையார்பேட்டை, தாண்டவராயன் கிராமணி தெருவில் சஞ்சய் ஜீவல்லர்ஸ் என்ற பெயரில் காலுராம், வ/45, த/பெ.தன்ரராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று (26.11.2017) இரவு சுமார் 8.00 மணியளவில் மேற்படி கடைக்கு தங்க நகையை அடகு வைக்க வந்த நபர் போலியான தங்க நகையை அடகு வைக்க முயன்ற போது கடையின் உரிமையாளர் சுதாரித்துக்கொண்டு தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில் பிடிப்பட்ட நபர் மாதவன், வ/38, த/பெ.கோவிந்தராஜ், எண்.40, திருமால் நகர், 4 வது தெரு, கொளத்தூர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மாதவன் இதே போன்று கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ஏழுகிணறு, பெரம்பூர், மைலாப்பூர், ஜாம்பஜார், தாம்பரம், மாதவரம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் போலியான தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. மாதவனிடமிருந்து 5 சவரன் போலி தங்க செயின், ரூ.80 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மாதவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.

சென்னை, கோயம்பேடு, சேமாத்தம்மன் கோயில் தெரு, 1வது செக்டாரில் கதவு எண்.52 என்ற முகவரியில் திரு.பிலால், வ/38, த/பெ.முஸ்தபா என்பவரும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *