Thursday , May 23 2019
Home / State-News / அதிமுக வேட்பாளர்கள் வருவாய் அலுவலரிடம் மனு.

அதிமுக வேட்பாளர்கள் வருவாய் அலுவலரிடம் மனு.

தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள மறு வாக்கு பதிவு நடைபெறும் மையங்களில் எதிர்கட்சிகள் கலவரம் செய்வதற்கு வாய்பு உள்ளதாகவும் எனவே வாக்குச் சாவடிக்கும் கட்சியினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர்கள் வருவாய் அலுவலரிடம் மனு.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தில் சில வாக்கு மையங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தேனி மாவட்டத்தில் பெரியகுளும் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு உட்பட்ட 197 மற்றும் 67 ஆம் எண் ஆகிய இரு வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் செய்து வருகின்றார்.

இந்நிலையில் அதிமுக பெரியகுளம் வேட்பாளர் மயில்வேல் மற்றும் ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜனும் மறு தேர்தல் நடைபெறும் இந்த இருவாக்குச்சாவடிகளில் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி வாக்கு பதிவு நடைபெறும் மையங்களுக்கு வேட்பாளர்களுக்கும் கூடுதல் பாதுகாப்ப வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் பாதுகாப்பு குறித்த மனுவை வழங்கினர். இதே போல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்த வாரம் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது

About Admin

Check Also

கோவையில் அனைத்து சமூக மக்கள் கட்சி அறிமுகம்.

கோவையில் சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் அனைத்து சமூக மக்கள் கட்சி,கோவை பத்திரிக்கையாளர் மன்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.