Tuesday , May 21 2019
Home / State-News / வி.சி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியின் 18 வது ஆண்டுவிழா

வி.சி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியின் 18 வது ஆண்டுவிழா

கோவை வி.சி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியின் 18 வது ஆண்டுவிழா கிரீன் பீல்டு வளாகத்தில், பள்ளியின் தாளாளர் சுகுணா செயலாளர் ஹெரால்டு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவர் தனது உரையில்,” பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு மனம் விட்டுப் பரிவோடு பேசி அன்பு செலுத்துங்கள்.
ஐ லவ் யூ செல்லம் என கனிவாகக் கூறுங்கள்.

கடல் ஏன் நீல நிறமாக உள்ளது என்பதையும் ஆகாயத்தில் உள்ள கோள்களைப் பற்றியும் விளக்கிக் கூறுங்கள்.

ஆண் பிள்ளைகளிடம் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கப் கற்றுக் கொடுங்கள்.

‘லஞ்சம்’ தவறு என்பதை சுட்டிக்காட்டி உழைப்பையும் நேர்மையையும் அவர்கள் மனதில் விதையுங்கள்.

புதிய புதிய புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள் என்பதைக் கூறி
மாணவ-மாணவிகளுடன் பார்த்து , “நீங்களும் உங்கள் பெற்றோர்களை ஹீரோ, ஹீரோயின்களைப் போல ரசிக்க வேண்டும்.
தினமும் செய்தித் தாள்களை வாசிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்,”. இவ்வாறு ஆலோசனை வழங்கி உரையாற்றினார்.

இவ்விழாவில், பீகார் மாநிலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரியும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஐ.ஏ.எஸ், அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமியின் பேராசிரியர் பத்மநாபன், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், சி.ஆர்.பி.எப். அதிகாரிகளான நவீன் பர்வந்தர் சிங், கமாண்டர் ஜெய்கிருஷ்ணன். பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.