Thursday , January 24 2019
Home / District-News / SC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி

SC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி

கோவையில் SC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா

கோவை டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்திய SC/ST மாணவ, மாணவிகளுக்கு TNPSC போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இரா.செந்திவேல் தலைமை தாங்கினார்.

மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

கோவை மாவட்ட மேலாளர், முன்னோடி வங்கி எல்.வெங்கட்ராமன் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உதவி ஆட்சியர் (பயிற்சி) டி.சினேகா கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் ஊக்குவிக்கும் வகையில் போட்டி தேர்வுக்குரிய தன்னம்பிக்கை கருத்துக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மனேகரன், விடுதி காப்பாளர் ஜெகநாதன், குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கோவை, பெள்ளாச்சி, வால்பாறை மற்றும் பல இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழா நிறைவில் தனி வட்டாட்சியர் ஏ.நாகராஜன் நன்றியுரையாற்றினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தினர்.

தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தின. தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் இருந்து வந்த இறை வழிபாட்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.