Wednesday , March 20 2019
Home / Tamilnadu Police / கொரட்டூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை ஆணையாளர் பாராட்டினார்

கொரட்டூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை ஆணையாளர் பாராட்டினார்

சென்னை, பாடி, வடக்கு மாட வீதி, எண்.38E என்ற முகவரியில் வசிக்கும் கோபிநாத், வ/71 என்பவர் TVS நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். முதியவர் கோபிநாத் நேற்று (27.12.2018) காலை சுமார் 06.15 மணிக்கு பாடி, ராஜா தெருவில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த 2 நபர்கள் கோபிநாத்திடம் ஒரு முகவரியை கேட்டு பின்னர் தங்களுடன் வந்து ஆட்டோவில் காண்பிக்கும்படியும், பின்னர் ஆட்டோவிலேயே தங்களை கொண்டு வந்து இறக்கிவிடுவதாகவும் கூறியுள்ளனர். அதனை நம்பிய முதியவர் கோபிநாத் அவர்களின் ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்த நபர்கள் அவரை வள்ளுவர் கோட்டம் வரை அழைத்துச் சென்று அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் ¾ சவரன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வள்ளுவர்கோட்டம் அருகில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் கோபிநாத் இது குறித்து தனது மகன் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்து மகனுடன் T-3 கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
உடனே, T-3 கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.R.மோகன் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.K.S.காந்தி, தலைமைக் காவலர் R.வாசுதேவன் (த.கா.36853) மற்றும் முதல்நிலைக் காவலர் I.சீதாராமன் (மு.நி.கா.36593) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் குற்றவாளிகளின் அடையாளம் தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மகேஷ் (எ) போலீஸ் மகேஷ் (எ) மகேந்திரன், வ/65, த/பெ.சாம்பசிவம், எண்.33, சம்பங்கி தெரு, லட்சுமி நகர், திருநின்றவூர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் விஜய், வ/39, த/பெ.கன்னியப்பன், காவேரி தெரு, தேவி நகர், திருநின்றவூர் ஆகிய இருவரையும் நேற்று (27.12.2018) கைது செய்தனர். அவர்களிடமிருந்து முதியவரிடமிருந்து திருடப்பட்ட 3 ¾ சவரன் தங்க நகைகள் மற்றும் மேற்படி ஆட்டோ (பதிவு எண்.TN07 AT 0645) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட மகேஷ் (எ) போலீஸ் மகேஷ் மீது V-3 ஜெ.ஜெ.நகர், T-2 அம்பத்தூர் எஸ்டேட், R-4, பாண்டி பஜார், G-3 கீழ்ப்பாக்கம், M-3 புழல் மற்றும் S-11 தாம்பரம் ஆகிய காவல் நிலைய எல்லையில் இதே போன்று முதியவர்களை குறி வைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களது தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து திருடியதும், சமீபத்தில் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, 2 மாதங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
மேற்படி சம்பவத்தில் திறமையாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த T-3 கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.R.மோகன், உதவி ஆய்வாளர் திரு.K.S. காந்தி, தலைமைக் காவலர் R.வாசுதேவன் (த.கா.36853) மற்றும் முதல்நிலைக் காவலர் I.சீதாராமன் (மு.நி.கா.36593) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (28.12.2018) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

About Admin

Check Also

443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன்சாவடி சந்திப்பிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.