Tuesday , August 20 2019
Home / District-News / கோவையில் குழந்தைகள் தினவிழா…

கோவையில் குழந்தைகள் தினவிழா…

 

சாய் வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மற்றும்
கலாம் மக்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய
குழந்தைகள் தினவிழா

மற்றும் டாக்டர்.ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் என் வாழ்வில் திருக்குறள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் விழா

கோட்டைப்பிரிவு, மத்தம்பாளையத்தில் அமைந்துள்ள சாய் வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சாய் வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் செயலாளர்
ஆர்.வெங்கடேஷ் அவர்கள்
வரவேற்புரை வழங்கினார்.

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருங்கிணைப்பாளரும்,கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனருமான ச.செந்தில் குமார், சாய் வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் தலைவர் கே.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் செந்தில் குமார் பேசியதாவது;
“இன்று குழந்தைகள் தினம். திரு.நேரு அவர்களைப் போல அப்துல் கலாம் அவர்களும் குழந்தைகளை மிகவும் நேசித்தார். கல்வி என்பது ஒரு மாணவரை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதற்கு அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையே சிறந்த உதாரணம். அவர் தனது வாழ்வில் திருக்குறளின் கருத்துக்கள் எவ்வாறு தன் வாழ்க்கை உயர்வுக்கு மிகவும் பயன்பட்டது என்பதை எளிய முறையில் இந்நூலில் பதித்திருக்கிறார். நீங்களும் அவரைப் போலவே குறள்வழி நடந்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும்”… இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஆர்.பாண்டியராஜன் I.P.S., அவர்கள் விழாவுக்குத்
தலைமை தாங்கி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்

விழாவில் அவர் பேசியதாவது; “மாணவர்கள் நல்லொழுக்கம் மிக்கவர்களாக வளர வேண்டும். ஒழுக்கம் மிகுந்த இளைய தலைமுறையினரால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அறிவியல் வளர்ச்சியை மாணாக்கர்கள் ஆக்கபூர்வமாகவே பயன்படுத்த வேண்டும். நாட்டுநடப்புகளை தினமும் தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உரிய வயதில் காவல்துறையினரோடு இணைந்து சமூக சேவையாற்ற வேண்டும்”… இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையைச் சார்ந்த
பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு அறக்கட்டளைத் தலைவர்
*சேவைச்செம்மல்* அழகர் செந்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும்
வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது;
“மாணவர்கள் விழிப்புணர்வை முதலில் தங்களது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். பெற்றோரிடம் குழந்தைகள் எந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதற்கு நிச்சயமான பலன் உண்டு. மொபைல் போனை குழந்தைகள் அளவோடு பயன்படுத்த வேண்டும். படிப்பு சம்பந்தமாக மட்டுமே உபயோகிப்பது மனநலனுக்கு அமைதியைத் தருவதாக அமையும். ரோஜாவின் ராஜாவான நமது முன்னாள் பிரதமர் திரு.நேரு அவர்கள் இதயத்திற்குப் பக்கத்திலேயே ரோஜாமலரை வைத்திருக்கக் காரணம் என்னவென்றால் மலரைப் போன்ற மென்மையான, தூய்மையான சிந்தனைகளை நமது இதயத்தில் நாளும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் உணர்த்தத்தான். எதிர்காலத்தில் நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை நமது இன்றைய செயல்களே தீர்மானிக்கின்றன என்பதை மனதில் வைத்து நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாணவர்களுக்கு தேர்வு நேர மன அழுத்தத்தைப் போக்கவும், நினைவுத் திறனை மேம்படுத்தவும், கற்றல் திறனை அதிகரிக்கவும் சில முத்திரைகளை அவர் கற்பித்தார்…

சாய் வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆர். ரமேஷ் நன்றியுரை வழங்கினார்.

விழாவில் பள்ளி முதல்வர் பிரபா, பெரிய நாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் மணி பெரிய நாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் திரளான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

ஓ.என்.ஜி.சி. சென்னை அலுவலகம் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

ஓ.என்.ஜி.சி. சென்னை அலுவலகம் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 73வது சுதந்திர தின விழாவில் திரு. V. ஷியாம் மோகன், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.