Sunday , November 18 2018
Home / District-News / கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் முன்பு மாரத்தான்

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் முன்பு மாரத்தான்


கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் முன்பு இராஜலட்சுமி முன்னாள் மாணவர்கள் நலன்புரி சங்கம் சார்பாக மாரத்தான் ஓட்டம் பந்தயம் நடைபெற்றது.

கோவை சிங்காநல்லூர் அரிமா சங்கம், தமிழ்நாடு சித்த மருத்துவ அறக்கட்டளை, சர்வதேச உரிமைகள் கழகம், நியோமேக்ஸ் குழுமம், கோவை ஸ்ரீ தனலட்சுமி அம்மாள் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய மாரத்தான் ஓட்டம்

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக
கோவை மாவட்ட உதவி ஆணையர் வெங்கடேசன் மற்றும் கே.ஜி.மருத்துவமனை டாக்டர் பக்தவத்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மாரத்தானில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாரத்தானில் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்குதல் நடைபெற்றது.

இவ்முகாமை கே.ஜி.மருத்துவமனை டாக்டர் பக்தவத்சலம் நிலவேம்பு மூலிகை குடிநீர் துவக்கி வைத்தார்.
உடன் அரிமா சீனிவாசன், டாக்டர். எம். கதிர்வேல், அ.பாலசுப்பிரமணியன், அரிமா இலட்சுமி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை சிங்காநல்லூர் அரிமா சங்கம், தமிழ்நாடு சித்த மருத்துவ அறக்கட்டளை, சர்வதேச உரிமைகள் கழகம், நியோமேக்ஸ் குழுமம் – கோவை ஸ்ரீ தனலட்சுமி அம்மாள் அறக்கட்டளை, இராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு இலவச நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கினார்.

மேலும் விழாவில் சர்வதேச உரிமைகள் கழகம் மகளிர் அணி பபிதா, முருகேசன், ஜி.சந்தோஷ்குமார், மற்றும் ஆத்மா மருத்துவர்கள், சங்க உறுப்பினர்கள் குழு கலந்து கொண்டனர்.

அனைவரும் ஒருங்கிணைந்து பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வுவை ஏற்படுத்தினார்.

விழா ழஒருங்கிணைப்பாளர்கள் சினிவாசன், நியோமேக்ஸ் குழுமம் நன்றி கூறினார்

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
Expressnews.asia [email protected] [email protected]

About Admin

Check Also

தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்

திராவிட கட்சிகளின் கொள்கை திட்டங்களை இலவசம் கேவலம் என்றும் இட ஒதுக்கீட்டை இழித்து, பழித்து சர்க்கார் படத்தில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸையும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.