Friday , April 26 2019
Home / District-News / சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம்.

சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லுர் சட்டமன்ற தொகுதி, சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம் சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.P.கந்தன் தலைமையில்  நடைபெற்றது . இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்  சிறப்புரையாற்றினார். சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழகம் சார்பில் 55 – ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். விரைவில்  வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூத்கமிட்டிகளை பலப்படுத்தி விரைவில் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பி. ராஜாராம், மேற்கு பகுதி கழக அவைத்தலைவர்  வி.குமார், வட்ட கழக நிர்வாகிகள் சுகுணாபலராமன், கே.ஆர்.மாணிக்கம், உமா மேகஸ்வரி, கே.குமார் வட்ட கழகச் செயலாளர்கள் பொன்னுசாமி ஜி.எம்.ஜானகிராமன், என்.தியாகராஜன், ஜெ.கே.மணிகண்டன், எம்.வெங்கேடசன், டி.எத்திராஜ், பி.பிரகாசம், இராம.சேகர், பி. எம்.ராமதாஸ், டி.சி. கருணா, எம். சங்கர், உள்ளகரம் பி.ரஞ்சித்குமார், எல். லட்சுமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகளிடம் உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்ட து.

About Admin

Check Also

ASIA’S LARGEST WEDDING EXTRAVAGANZA “WEDDING VOWS CONNECT 2019”

Chennai, April 2019: Wedding Vows Connect 2019, India’s largest wedding Extravaganza begins at the Radisson …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.