Monday , July 22 2019
Home / Spiritual / சபரிமலையின் புனிதத்தையும் காக்க வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

சபரிமலையின் புனிதத்தையும் காக்க வேண்டி கூட்டுப்பிரார்த்தனை


“மஹா யாக வேள்வி” பூஜை

கோவை சலீவன்வீதி, மாரண்ணக்கவுடர் பள்ளியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக சபரிமலையின் மாண்பையும், புனிதத்தையும், ஆச்சாரங்களையும் பாதுகாக்க வேண்டி “மஹா யாக வேள்வி” பூஜை நடைபெற்றது.

இவ்விழாவை கோவை மாநகர் மாவட்டம் தலைவர் கே.ஜெயக்குமார், செயலாளர் கே.பிரவீன்குமார், பொருளாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் தலைமையில் தாங்கி நடத்தினர்.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக தவத்திரு. சாந்தலிங்க மருதாசலம் அடிகளார், கெளமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சாகத் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வராஹி மணிகண்ட சுவாமிகள், கோவை ஸ்ரீ மத் தர்மராஜா அருள்பீடம் சிவ ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி சுவாமிகள், கோவை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் முன்னணி வகித்தனர்.

சபரிமலையின் மாண்பையும், மரபையும், புனிதத்தையும், ஆச்சாரங்களையும் பாதுகாப்பு வேண்டி நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் ஐயப்ப பக்தர்கள், குருசாமிகள், ஆன்மிக அன்பர்கள், இந்து உணர்வாளர்கள், தாய்மார்கள், குழந்தைகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நமது இந்து மதத்தின் உரிமையையும் சபரிமலையின் புனிதத்தையும் காக்க வேண்டி ஓன்று கூடி ‘கூட்டுப்பிரார்த்தனை’ செய்தனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com
rukivaniphotographer@gmail.com

About Admin

Check Also

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.