Monday , October 22 2018
Home / District-News / சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் அகற்றும்  பனி நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் அகற்றும்  பனி நடைபெற்றது.

சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்லாமல் மக்கள் அவதி நிலையில் உள்ளதால்  வீடுகள் மற்றும் கடைகள் ஜே.சி.பி எந்திரமூலமாக அரசு அதிகாரிகள் பார்வையில் அகற்றும்  பனி நடைபெற்றது.
இதில்  சோழிங்கநல்லூர் வட்டாச்சியர் நிர்மலா  தலைமையில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் வடிகால்  நீர்நிலை இடத்தில் பொதுமக்கள்  1 .47   ஏக்கர்  நிலத்தை ஆக்கிரமிப்பு  செய்ததால் அப்பகுதியில் மழை காலங்களில்  தண்ணீர் வெளியே செல்லாமல் மக்கள் அவதி  பட்டு வருவதால்  முன்னதாகவே நீர்  வெளியே செல்ல  ஆக்கிரமிப்பு செய்த  இடத்தில் 24 வீடுகள்  ஜே.சி.பி எந்திரமூலமாக காவல் துறை பாதுகாப்பு மூலமாக  அகற்றப்பட்டது
நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர்  சார்பில் சென்னை சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதாண சாலையில் மழை காலங்களில் சாலையில் மழை நீர் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு செல்லும், இதனால் மிகுந்த போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால்  வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமுத்துக்குள்ளாகி வந்தனர்
மழை காலம் அல்லாது மற்ற நேரங்களிலும் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் பிரதாண சாலையில் ஐ.டி நிருவணங்கள் அதிகம் உள்ளதால்  மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே சாலை மற்றும் மழைநீர் வடிக்கால் கால்வாயை ஆக்கிரமித்து வணிக கடை, உணவகங்கள், தேநீர் கடை மற்றும் வீடுகளுக்கு கடந்த ஆறு மாதங்ளுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டு பட்டா இல்லாது பொறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டியுள்ள கட்டிடங்களை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர் , கட்டிடம் இடிக்கும் இடங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க செம்மஞ்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.