Friday , April 26 2019
Home / District-News / அனகாபுத்தூரில் தேமுதிக பொதுக்கூட்டம் வி.விஜய்பிரபாகரன் பங்கேற்பு

அனகாபுத்தூரில் தேமுதிக பொதுக்கூட்டம் வி.விஜய்பிரபாகரன் பங்கேற்பு




காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில், அனகாபுத்தூர்  நகர தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, மற்றும் கழக14வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் வி.விஜய்பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

அனகாபுத்தூர் நகர கழகசெயலாளர் லயன் கே.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காஞ்சி(வ)மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ.,அனகை டி.முருகேசன் சிறப்புரையாற்ற, 10வது மற்றும் 12வது வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளும், நலிவுற்ற மக்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, புடவைகள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வி.விஜய்பிரபாகரன் வழங்கினார். இதில் அனகாபுத்தூர் நகர கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கழக பிற அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

ASIA’S LARGEST WEDDING EXTRAVAGANZA “WEDDING VOWS CONNECT 2019”

Chennai, April 2019: Wedding Vows Connect 2019, India’s largest wedding Extravaganza begins at the Radisson …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.