Friday , April 26 2019
Home / District-News / மக்கள் சட்டம் உரிமைகள் கழகம் விழிப்புணர்வு

மக்கள் சட்டம் உரிமைகள் கழகம் விழிப்புணர்வு


கோவையில் மக்கள் சட்டம் உரிமைகள் கழகம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு

பெண்கள் பாதுகாப்புக்கு செயின் பரிப்புக்கு விழிப்புணர்வு செய்வதற்க்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை நிகழ்ச்சி

வழிப்பறி ஓழியட்டும்….
பெண்கள் நலம் ஓங்கட்டும்

பெண்களே…உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்…

புதிய நாகரீகமாக கைக்குட்டை அளவு ( ஸ்கார்ப்) வழங்கும் விழா

கோவை டவுன்ஹால் கார்னர் பகுதியில் கோவை மாவட்டம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழிப்பறி ஒழியட்டும் பெண்கள் நலன் கருதி (செயின் கொள்ளையை தடுக்க ) புதிய நாகரீகமாக உருவாக்க கைக்குட்டை அளவு (ஸ்கார்ப் போன்று) துணி கழுத்தில் அணிவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சிறப்புவிருந்தினராக சமூக சேவகர் எஸ்.பி அன்பரசன் அவர்கள் உதவியாளர் மதனகோபால் கலந்து கொண்டு இந்நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு அமைப்புகள் சமூக சேவை, சமூக ஆர்வலர்கள் 100-க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.

டவுன்ஹால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு பலர் அமைபினர்கள் ஸ்கார்ப் வழங்கினார்.
சாலையை வழியாக வந்தவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள், அமைப்புகள் உள்ள பெண்களுக்கு கழுத்தில் ஸ்கார்லெட் கட்டிவிட்டு, துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

ASIA’S LARGEST WEDDING EXTRAVAGANZA “WEDDING VOWS CONNECT 2019”

Chennai, April 2019: Wedding Vows Connect 2019, India’s largest wedding Extravaganza begins at the Radisson …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.