கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா
கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் கோவை நகரில் உள்ள 24 போலீஸ் நிலையங்களிலும் ‘காவல் நிலையம் தோறும் நூலகம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் நூலகம் தொடக்க விழா நடைபெற்றது.
அரிமா மாவட்ட கவர்னர் மோத்திலால் கட்டாரியா வரவேற்றார்.
போலீஸ் நிலையத்தில் நூலகம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ். பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
போலீஸ் கமிஷனர் பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், அம்மன் கே. அர்ச்சுணன் எம். எல். ஏ, புத்தகம் வழங்கப்பட்டது.
விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கே.பெரியய்யா, டி.ஐ.ஜி.கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அம்மன் அர்ச்சுணன் எம். எல். ஏ. , துணை போலீஸ் கமிஷனர்கள் எஸ்.லட்சுமி, சுஜித் குமார், எஸ். செல்வகுமார், ரூட்ஸ் நிர்வாக இயக்குனர் கவிஞர் கவிதாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் அரிமா முதல் நிலை துணை ஆளுநர் ஆர். கரணபூபதி, இரண்டாம் துணை ஆளுநர் ஆர்.என் கருணாநிதி மற்றும் முன்னாள் ஆளுநா் களும் முன்னிலை வகித்தனர்.
அரிமா என்.சுப்ரமணியம், எஸ்.ராம்குமார், எஸ்.முருகன், என்.ஆர்.கதிரவன் ஆகியோர் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர்.
ஒருங்கிணைப்பாளரான அரிமா சுபா சுப்ரமணியம் நன்றியுரை வழங்கினார்.
கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]