Tuesday , June 25 2019
Home / Spiritual / ஸ்ரீ விநாயகா குழுமம் சார்பில், விநாயகர் கண்காட்சி

ஸ்ரீ விநாயகா குழுமம் சார்பில், விநாயகர் கண்காட்சி

 

சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஸ்ரீ விநாயகா குழுமம் சார்பில், விநாயகர் கண்காட்சி, ஸ்ரீ லட்சுமி ராம் கணேஷ் மஹாலில் நடை பெற்று வருகிறது. இக்கண்காட்சியில் உலோகம், கற்கள், கண்ணாடி, மண், மரம் போன்ற பலவிதபொருட்களினாலான விநாயகர் சிலைகள், ஓவியங்கள், மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளது. அம்மையப்பனை சுற்றி வரும் விநாயகர், 25 தலைகளுடைய விநாயகர், நவக்கிரக விநாயகர், மேலும் விநாயகர் படகு  ஓட்டுவது, மயில் வாகனத்தில் பறப்பது,    ஊஞ்சலாடுவது, வாத்தியங்கள் இசைப்பது, உடல் அவயங்களை அசைத்து ஆசிர்வதிப்பது போன்றவை தத்ரூபமாக காண்போரை கவரும் வண்ணம் உள்ளது. சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் வடிவங்கள் இடம் பெற்றுள்ள இக்கண்காட்சி 12 வது ஆண்டாக நடைபெறுகிறது என்றும், வரும் 23 ந்தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியை பொது மக்கள் இலவசமாக பார்த்து, ரசித்து, விநாயகரை வழிபடலாம் என்றும் அமைப்பாளர் ஸ்ரீவிநாயகா குழுமம் சீனிவாசன் தெரிவித்தார்.

About Admin

Check Also

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.