Saturday , September 22 2018
Home / District-News / கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ. உ.சிதம்பரனாருக்கு மரியாதை

கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ. உ.சிதம்பரனாருக்கு மரியாதை


கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ. உ.சிதம்பரனார் அவர்கள் இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனாரின் 147-வது பிறந்த நாளையொட்டி

கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ. உ.சிதம்பரனார் நினைவு மண்டபத்தில் அவரது சிலை மற்றும் அவர் இழுத்த செக்கிற்கு, கோவை மாவட்ட மூன்று மந்தை எண்பத்து நான்கு ஊர் சோழிய வெள்ளாளர் சமூக நலச்சங்க தலைவர் பழனிசாமி பிள்ளை செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ராமசாமி, நாட்டாமை மாணிக்கம் மற்றும் சோழிய வெள்ளாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் அவர்கள் கூறுகையில் கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள உ.சிதம்பரனார் இழுத்த செக்கினை பொது மக்கள் பார்வைக்கு பூங்காவில் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

வ. உ.சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு, பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.

வேளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் வ.உ.சி.பேரன் மு.நா.பா. தமிழ்வாணன், கோவை வழக்கறிஞர்கள் சார்பில் பகுதி கழக செயலாளர் விமல் சோமு மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் பலர் அமைபினர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம்.

சென்னை. செப் 15:  ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என்றும் 377 சட்டப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.