Sunday , September 23 2018
Home / District-News / தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு


சென்னை தலைமை செயலகம்  முன்பு 16.08.2018  காலை தூத்துக்குடி ஸ்டெர்லைட்  தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரி  பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார சமூகநல  திட்ட  பயனாளிகள்   கோரிக்கைமனு கொடுத்தனர் .

சமூகநல  திட்ட  பயனாளிகள்   காலை 11 மணி அளவில் சென்னை தலைமை செயலகம் வந்து மனு கொடுத்தனர் . வேதாந்தா ஸ்டெர்லைட்  நிறுவனம் ஆற்றி வந்த பல சமுதாய நலத்திட்டங்கள் பல ஆயிரம் மக்களுக்கு பயனளித்து வந்தன. குஷி திட்டம் மூலம் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு, பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் மூலம் பல ஆயிரம்  பெண் குழந்தைகளுக்கும், வேலை இல்லாமல் பல இன்னல்களை அனுபவித்து வந்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து  வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது. அத்துடன் இன்னும் பல சிறப்பான திட்டங்களை ஸ்டெர்லைட் செயல்படுத்தி வந்தது.

மேலும், சகி என்னும் திட்டத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிப்பாதைக்கு  முக்கிய பங்கு வகிக்கும் பெண்களை குழுவாக ஒருங்கிணைத்து, இலவச தொழில் பயிற்சி அளித்து, அவர்களுக்கு கடன்பெற்று தந்து  தொழில்முனைவோராக்கியிருக்கிறது. அவர்களுக்கு விருது வாங்கி கொடுத்து ஊக்கமும் அளித்து வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் அடைத்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், பல சமுதாய  நலத்திட்டங்கள் மூலம் சுமார்  2.5 லட்சத்துக்கும் மேலான மக்கள்  பயன் அடைந்து வருகின்றனர் .

ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 23 வருடங்களாக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கி பல்லாயிரம் ஏழை தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மற்றும் பல லட்சம் தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கி வந்தது. மேலும் பல கோடிகள் ரூபாய்கள் மதிப்புள்ள சமுதாய வளர்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் பெட்டகமாய் 100% பாதுகாப்புடன் இது இயங்கி வந்தது.

 

 

தமிழக அரசு திடீரென இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதால் நாங்கள் உதவி பெறமுடியாமல்  தவிக்கிறோம் என்று புலம்பினர். இந்த ஆலை, மறைந்த தமிழக முதல்வர் இரும்புப்பெண்மணி என அழைக்கப்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களால் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரத்திற்காகவும் மற்றும் தூத்துக்குடியில் ஓட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடங்கப்பட்டது. இந்த ஸ்டெர்லைட்  நிறுவனம் சமூக பொறுப்புடன் இயங்கி வரும் ஒரு அத்தியாவசியமான நிறுவனமாகும். அம்மா அரசுக்கு எதிரான சில திட்டமிட்ட வதந்திகள் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாத சில நபர்களின் தூண்டுகோளின்பேரில் இன்று மூடப்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தமிழக அரசு கருணையுடன் எங்கள் வேண்டுகோளை பரிசீலித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

About Admin

Check Also

Jaipur Pink Panthers set up their pre camp at Sathyabama University in Chennai

Jaipur Pink Panthers is pleased to announce Anup Kumar as the captain of the team …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.