Tuesday , December 18 2018
Home / Spiritual / திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் (16.08.2018) வியாழக்கிழமை காலை
கோலகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வையொட்டி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன.

யாக சாலையின் மூலவர் மற்றும்
கோயிலில் உள்ள இதர சன்னதிகளான வரதராஜ சுவாமி, யோகநரசிம்மர், ராமானுஜர், வகுலமாதா சன்னதியில் உள்ள மூலவர்களின் ஜீவ சக்திகள் கும்பத்திற்கு கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜைகள் நடந்தன.

பின்னர் மூலவர் சன்னதிக்கு மேல்
உள்ள ஆனந்த நிலையம் மற்றும் இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணிகள், தங்க கொடிமரம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கருவறைக்கு
மேல் உள்ள ஆனந்த நிலையம்,
ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

About Admin

Check Also

ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில் மஹா கும்பாபிஷஹகம்.

சென்னை ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில்  ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மற்றும் ஜீர்ணோத்தாரன அஷ்டபத்தன் மஹா கும்பாபிஷஹகம் வரும் 17 -06 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.