Sunday , February 24 2019
Home / District-News / தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சியைக் கண்டித்து கோவை மாவட்ட செயலாளர் மு. அறிவரசு தலைமையில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

சிறுவாணி குடிநீர் பராமரிப்புப் பணிகளை பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்துக்கு 26 ஆண்டுகளுக்கு ஒப்படைத்த கோவை மாநகராட்சியைக் கண்டித்தும்,

வீட்டு வரியை 100 சதவீதம் உயர்த்தியுள்ள மாநில அரசைக் கண்டித்தும், மாவீரன் ஒண்டிவீரன் சிலையை சென்னையில் அமைத்திடக் கோரியும், குடிநீர் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.

சூயஸ் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் இளவேனில், மாநில கொள்கைப் பரப்பு துணை செயலாளர் கோவை மார்க்ஸ், மாநில மேற்கு மண்டல துணை செயலாளர் சிற்றரசு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

CHENNAI PHOTO BIENNALE 2019

​The second edition of India’s largest photography event kicks off The second edition of Chennai …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.