Sunday , October 21 2018
Home / District-News / ஃபேஷன் க்ள்ப்” துவக்க விழா

ஃபேஷன் க்ள்ப்” துவக்க விழா


கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும்
மேலாண்மைக் கல்லூரியில் “ஃபேஷன் க்ள்ப்” வாளகத்தில் துவக்க விழா நடைபெற்றது.

கோவை ஸ்ரீவாரி அப்பர்ல்ஸ் மார்க்கெட்டிங் மேலாளர் வருண் கிருஷ்ணா,
மற்றும் பெங்களூர் ரிலையன்ஸ் டிரென்ட் உதவி வடிவமைப்பு மேலாளர் டி. எஸ். சந்தோஷ் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து
கொண்டு
குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினைத் துவக்கி வைத்தனர்.

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும்
மேலாண்மைக் கல்லூரி துறைத் தலைவர்
எஸ். மோகன்ராஜ், வரவேற்புரையாற்றினார். எம்.
புவனேஷ்வரி, துணை பேராசிரியை, சிறப்பு விருந்தினர்களை
வரவேற்றார். அவர் குழுவின் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்தார்.

குழுவின் செயலாளர், மாணவி அபிராமி வல்ஸ்ராஜ், “ஃபேஷன் க்ள்ப்”,
ஆண்டறிக்கை வாசித்தார்.
முனைவர் ரமேஷ்குமார், இயக்குனர் சிறப்புரையாற்றினார்

வருண் கிருஷ்ணா, சிறப்பு விருந்தினர், கற்றுக்கொள்ளக்
கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொள்ளுமாறும், தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறும்
கூறினார்.

மேலும் இந்தியாவைக் காட்டிலும் வெளி நாடுகளில் ஆடை
அலங்கார தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு பல வாய்ப்புகள்
உள்ளன என்றும் அதைத் தேடி தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத்
தொடருமாறும் பேசினார்.
நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக மாணவர் ராஜராஜன்,
தலைவர், “ஃபேஷன் க்ள்ப்”, தங்கள் குழுவின் சின்னத்தை அறிமுகம்
செய்தார்.

சிறப்பு விருந்தினர் டி. எஸ். சந்தோஷ்
சுந்தர் கூறியதாவது: இந்தக் குழுவில் உள்ள மாணவர்கள்
அனைவருமே தனித்துவம் வாய்ந்தவர்கள்தான். மற்ற சாதாரண
பாடங்களைப் பயிலும் மாணவர்களுடன் ஒப்பிடும் போது துகிலியல்
துறை மாணவர்கள் மிகவும் புதுமைமிக்க படைப்பாற்றல்
கொண்டவர்கள். வாழ்க்கையில் சாதிக்க மற்றவர்களைக் காட்டிலும்
ஒரு தனிப்பட்ட திறமை கொண்டிருத்தல் அவசியம். அதுவே உங்கள்
முகவுரையைக் காட்டும், மற்றவர்களிடமிருந்து தனித்துவம்
பெற்றவர்களாக விளங்க உதவி புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் மாணவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கினார்.

இதில் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர் முரளி மோகன், துணைத் தலைவர், “ஃபேஷன்
க்ள்ப்”, நன்றியுரை வழங்கினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.