Friday , August 17 2018
Home / District-News / கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”முப்பெரும் விழா”

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”முப்பெரும் விழா”


கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி யில்”முப்பெரும் விழா எஸ்.என். ஆர் சன்ஸ் வாளகத்தில் நடைபெற்றது.

தமிழ் மன்றத் தொடக்கவிழா, தன்னம்பிக்கை மன்றத் தொடக்கவிழா மற்றும் அதனையொட்டியே கருத்தரங்கம் என மூன்று நிகழ்ச்சிகளின் சங்கமமாக இவ்விழா நடந்தது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன் தலைமையேற்ற இவ்விழாவில் சிவோகா மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் ‘லட்சியத் தென்றல்’ லட்சுமிகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

 “நம்பிக்கையோடு நடைபோடு” என்ற தலைப்பில் “இளைய தலைமுறை மாணவர்கள் ஆசைகளை வளர்பதைக் காட்டிலும் உயர்ந்த லட்சியங்களை தங்கள் மனதில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

உலக அரங்கில் இந்திய இளைஞர்களின் சக்தியும், அறிவாற்றலும், கல்வியும் பெருமதிப்பு பெற்றுத்திகழ்கின்றன. மாணவர்கள் தங்களுக்குள் பொதிந்துள்ள ஆற்றலை அறிந்து அதனை கொண்டு உயர்ந்த லட்சியங்களை அடைய முற்பட்டால் உலக அரங்கில் இந்திய இளைஞர்கள் நிச்சயம் முன்னிலைபெருவார்கள். மேலும் ”தன்னம்பிக்கை மன்றம்” என்பது இக்கல்லூரியிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று  அவர் பேசியது மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டும் விதத்தில் அமைந்திருந்தது. விழாவின் இறுதியில் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தமிழ்த்
துறைத் தலைவர் முனைவர் த.விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள் இவ்விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

“இந்திய சுதந்திர சிற்பிகள் ” என்னும் நூல் 160 தேசத் தலைவர் பற்றிய சிந்தனை நூல் வெளியீட்டு

கோவையில் சகோதரத்துவப் பேரவை மற்றும் டாக்டர் என். ஜி.பி.கலை கல்லூரி விஜயா பதிப்பகம் இணைந்து நடத்திய “இந்திய சுதந்திர சிற்பிகள்” …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.