கோவை டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி
மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
இணைந்து நடத்தும்
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாணவர்படை துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு
சிறப்புவிருந்தினராக ஜி.தர்மராஜன் ஐ.பி.எஸ். காவல் துணை ஆணையாளர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
டாக்டர். தவமணி பழனிசாமி
செயலாளர், டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி தலைமை வகித்தார்.
வரவேற்புரை வழங்குபவர் டாக்டர். எஸ். நமசிவாயம்
ஒருங்கிணைப்பாளர்,நாட்டு நலப்பணித் திட்டம்,
டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி மற்றும்
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அறிமுகம் ச.செந்தில் குமார்,
ஒருங்கிணைப்பாளர், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ், கே.எஸ்.நித்யா வாழ்த்துரை யாற்றினார்.
இவ்விழாவில்
சுரேஷ், உதவி ஆணையர், சட்டம்& ஒழுங்கு பாஸ்கரன், உதவி ஆணையர், குற்றப்பிரிவு
ரவிகுமார், துணை கண்காணிப்பாளர் சுகுமார், உதவி ஆணையர், குற்றப் பதிவேடு செல்வராஜ், ஆய்வாளர் இ-2 காவல் நிலையம்
ராஜேந்திரன், முதவ்வர், டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி , நரசிம்மன் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மாநகர துணை ஆணையாளர், தர்மராஜன் ஐ.பி.எஸ்.
அவர்கள் உரையில்
கூறுகையில் கல்வியில் சமுதாய பாடங்கள் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களிடம் சமுதாய சிந்தனையும் குறைந்து வருகிறது. இந்த நிலை மாறவேண்டும். மாணவர்கள் அர்த்தமான வாழ்க்கை வாழ வேண்டும்.வெறும் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் அது அர்த்தமான வாழ்க்கையாக இருக்காது.மாணவர்கள் சமுதாய சிந்தனையோடு பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தில் செயல்பட வேண்டும்.
மேலும் நிகழ்ச்சியில் டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர். தவமணி பழனிசாமி, நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். எஸ். நமசிவாயம், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் கோவை ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கும், ஏ டி எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளை கொண்டு கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்க முக்கிய பங்கு ஆற்றிய சைபர் கிரைம் போலிசாருக்கும் விருதுகள் வழங்கி பாராட்டினார்.
மாணவர் படை துவக்க விழாவில்
மாணவகள் 2000 பேர் இணைந்தனர்.
கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]