Saturday , February 23 2019
Home / District-News / “கைவினைஞரின் ஆடி திருவிழா” “கண்காட்சி மற்றும் விற்பனை”

“கைவினைஞரின் ஆடி திருவிழா” “கண்காட்சி மற்றும் விற்பனை”




தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகம் கோவை பூம்புகார் ரா.நரேந்திர போஸ் மேலாளர் கூறியதாவது

கோவை கைவினைப்பொருட்கள் பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகம், ஒவ்வொரு ஆண்டும்பண்டிகைக்காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப் போல இந்த ஆண்டும்“கைவினைஞர்களின் ஆடி திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை” 17.07.2018 முதல் 31.07.2018 முடிய தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய பூம்புகார் விற்பனை நிலையம், 1239 பெரிய கடைவீதி, கோவையில் நடந்து வருகிறது.

இக்கண்காட்சியில் கலம்காரி துணிவகைகள், மகளிர் காட்டன் துணிவகைகள், மர பொம்மைகள், மரத்தினாலான் மசாஜ் உபகரணங்கள், காகித கூழ் பொம்மைகள், களி மண் பொம்மைகள், தேங்காய் நார் பொருட்கள் மற்றும் தோட்ட உபகரணங்கள், வாசனை மெழுகுவர்த்திகள்,பித்தளை சிலைகள், பளிங்குத்தூளில் செய்யப்பட்ட சிலைகள், பித்தளை பொருட்கள் மற்றும் எண்ணற்ற பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி 17.07.2018 முதல் 31.07.2018 வரை தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில்விற்பனை செய்யப்படும் அனைத்து கைவினைப்பொருட்கள் 10 சதவிகிதம் வரை சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

இக்கண்காட்சி மூலம்ரூபாய் 5.00 இலட்சம்விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

அனகாபுத்தூர் நகர அதிமுக சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், அனகாபுத்தூர் நகர அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட அம்மா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.