Monday , January 21 2019
Home / EDUCATION / ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 28-ஆம் ஆண்டு மாணவர் மன்றத் துவக்க விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 28-ஆம் ஆண்டு மாணவர் மன்றத் துவக்க விழா


கோவை, ஸ்ரீ
இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 28-ஆம் ஆண்டு மாணவர் மன்றத் துவக்க
விழா 13-ம் தேதி எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவின் மையக்கரு
“சினேர்ஜி” ஆகும்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மீரா மேனன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர்தம் உரையில் நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தினால் வெற்றி
நிச்சயம் என்பதை அழுத்தமாகக் கூறினார். மேலும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறநிலையத்தின் இணை அறகாவலர்
டி.லஷ்மிநாராயணசாமி அவர்கள் துவக்க உரையாற்றினார்.

அவர்தம் உரையில் கல்வியே
வெற்றியின் திறவுகோல் என்றும் தரமான கல்வியை வழங்குவதே எங்களின் தலையாய நோக்கம் என்பதையும் தன்
உரையின் வழி உணர்தினார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறநிலையத்தின் கல்வி இயக்குநர் டாக்டர்.ஏ.எபினேசர் ஜெயக்குமார் அவர்கள்
தலைமை உரையாற்றினார்.

கல்லுரியின் முதல்வர்.முனைவர்.கி.சித்ரா அவர்கள் வரவேற்புரையும், சிறப்பு
விருந்தினர் அறிமுகவுரையும் வழங்கினார்.

அவர்தம் உரையில்; தலைமை என்பது வெறும் வார்த்தைகள் அல்ல
அது நம் எண்ணங்களின் தாக்கம் என்பதை மாணவிகளுக்கு உணர்த்தினார்.

இவ்விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி எஸ்.ஸ்வாதி ரோகித்
அவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர் மன்ற உறுப்பினர்கள்
தங்களி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

NIIT announces 14th National Industry Targeted Aptitude Test (NITAT)

Chennai , January, 2019: NIIT Limited, a global leader in skills and talent development, has …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.