Thursday , September 27 2018
Home / EDUCATION / நேஷனல் மாடல் பள்ளி மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா

நேஷனல் மாடல் பள்ளி மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா



கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 9 அன்று நடைபெற்றது.

அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி மாணவர் தலைவராக பதினொன்றாம் வகுப்பு மாணவி சோனாஸ்ரீ, பள்ளி மாணவர் துணைத் தலைவராக பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஸ்ரீ விக்னேஷ் பதவி ஏற்றனர்.

பள்ளியில் செயல்படும் நான்கு குழுக்களான ஃளையர்ஸ், ஸ்பிரிண்டர்ஸ், மரைனர்ஸ், ஸ்கீயர்ஸ் பிரிவுக்கான மாணவர் தலைவர்களும், பள்ளி விளையாட்டுத் துறைக்கான மாணவர் தலைவர்களும் பதவியேற்றனர்.

இவ்விழாவிற்கு பெற்றோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டனர்.

இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் அனைத்து மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

DR. JEAN DREZE UNDERSCORED THE IMPORTANCE OF SOCIAL DEVELOPMENT IN NATION BUILDING

XLRI- Xavier School of Management recently organized the 5th “Dr Verghese Kurien Memorial Oration on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.