*குஜராத் முன்னால் IAS அதிகாரியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹர்ஷ்மந்தர் உடன் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் சந்திப்பு:*
கோவையில் நடைப்பெற்று வரும் தலித்,கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், சிறுபான்மை மக்களின் வழிப்பாட்டு தலங்கள் மீது நடைப்பெற்ற தாக்குதல்கள் மற்றும் புதிய வழிப்பாட்டு தலங்களை அமைப்பதற்க்கு தடைகளை ஏற்ப்படுத்திவரும் இந்துத்துவ அமைப்புகள் பற்றியும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக கோவையில் 1997 நடைப்பெற்ற கலவரம், 2016 செப்டம்பர் 23 அன்று நடைப்பெற்ற கலவரங்கள் அதை தொடர்ந்து நடைப்பெற்று வரும் வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது மேலும் இந்த கலவரங்களுக்கு காரணமான இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் குறிப்பாக அர்ஜுன் சம்பந்த் போன்றவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் கைது செய்யப்பட்டவர்கள் 10ஆண்டுகள் கழிந்தும் ஒரு சிலர் 20ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் அரசால் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் இது போன்ற நிகழ்வுகள் நாடு முழுவதும் உள்ளதாகவும் இதற்கெதிராக தேசம் தழுவிய போராட்டங்களை முன்னெடுப்பது போன்ற பல்வேறு கருத்துகளை விவாதித்தனர்.
இச்சந்திப்பில்
*பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் அன்வர் உசேன் செயலாளர் ஹக்கீம், ஜலீல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் டாக்டர் ஜான் தயாள் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected] [email protected]