Tuesday , September 25 2018
Home / District-News / வி.பி.எல் பைனான்ஸ் நிறுவனம் 14-வது புதிய கிளை நாளை துவக்கம்.

வி.பி.எல் பைனான்ஸ் நிறுவனம் 14-வது புதிய கிளை நாளை துவக்கம்.

கோவையில் வி.பி.எல் பைனான்ஸ் நிறுவனம் 14-வது புதிய கிளை நாளை துவக்கம்

வி.பி.எல். பைனான்ஸ் என்ற நிறுவனம் 1994-ம் ஆண்டு கே.ஜி.லாரன்ஸ் அவர்கள் நிறுவனத்தை கேரளாவில் ஆரம்பித்தார்.

இப்போது வெள்ளிவிழா ஆண்டு நடைபெறும் இந்நிறுவனம் கேரளாவில் 55 கிளைகளை கொண்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
இதைகுறித்து நிறுவனத்தின் இணை மேலாளர் விவேக் லாரன்ஸ், பொது மேலாளர் பார்த்தசாரதி கூறிகையில்

வி பி எல் பைனான்ஸ் நிறுவனம் பிரைவேட் லிமிடெட் மற்றும் நான் பேங்கிங் பைனான்ஸ் கம்பெனியாக பதிவு பெற்ற இந்நிறுவனம் மக்களுக்கு அவசர தேவைகளுக்காக கடன் கேட்டு அலையும் சாமானிய மக்களுக்கு தங்க நகையின் பேரில் குறைந்த வட்டியில் நிதி உதவிகள், இத்துடன் தனிநபர் கடன், ஹயர் பர்ச்சேஸ் லோன்,
பாரின் கரன்சி எக்ஸ்சேஞ்ச் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற இந்நிறுவனம் இதுவரை 13 கிளைகளை இங்கு துவக்கி உள்ள இந் நிறுவனம் கோவையில் 14-வது கிளையை நாளை ராமநாதபுரத்தில் உள்ள மண்டல அலுவலகம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் துவங்க உள்ளன.

கோவையிலேயே முதன் முறையாக “ஆன்லைன் கோல்டு லோன்” என்ற வசதியை துவக்க இருக்கிறோம்.

இதன் மூலம் அவசர தேவைக்கான நிதி உதவிகளை ஆன்லைன் மூலம் சில விநாடிகளில் பெறமுடியும்.

இது கோவை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.

வரும் 5 வருடங்களில் 25 கோடி இலக்கை அடைவதும், கோவை மற்றும் திருப்பூரில் 25 புதிய கிளைகளைத் துவக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected] [email protected]

About Admin

Check Also

AR Rahman & Gulzar come together to create the official song for Odisha Hockey Men’s World Cup, Bhubaneshwar 2018

Chennai, September  2018 –With the Hockey World Cup 2018 just around the corner, the Odisha …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.