Sunday , December 16 2018
Home / District-News / கோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


 


கோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டட்டம்

நடிகர் விஜய்யின் 44 வது பிறந்த நாள் விழா கோவை இந்தியன் பவுன்டேஷன் சார்பாக பப்பீஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக JRD ரியல்டோர்ஸ் நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் ஜெயகோபால், தீபக் விக்னேஷ்வர் மற்றும் ரமா ராஜேஷ், கவிதா ரமேஷ், கோவை புட்டீஸ் லலிதா கவுதம் பலர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் ஊனமுற்றவர்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரஜேந்திரன் ஜெயகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு
கோவையில் விழிப்புணர்வு இருசக்கர பேரணியாக கொண்டாடப்பட்டது.

இந்த பேரணி அண்ணாசிலையில் இருந்து கோவை கொடிசியா வரை சென்றடைந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ரத்தினம் மெமோரியல் டிரஸ்ட் & மோட்டர் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர் மூகாம்பிகா ரத்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன் (ஓவியர் &டிசைனர்) ரமா ராஜேஷ், கவிதா ரமேஷ், கோவை புட்டீஸ் லலிதா கவுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தளபதி விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளை முன்னிட்டு இந்தியன் பவுண்டேசன் சார்பில் ஏழு வருடங்களாக பொதுமக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

பேரணியில் 100 க்கும் மேட்பட்ட விஜய் ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக கலந்து கொண்டனர்.

இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு நடிகர் விஜய் 44-வது பிறந்த நாள் முன்னிட்டு 44 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

இந்தியன் பவுண்டேஷன் தலைவர் ஜான் அமலன் பேசும் போது இந்தியன் பவுண்டேஷன் துவங்கி 7 வது வருடமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தளபதியின் பிறந்த நாளை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எங்கள் தளபதியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நாங்கள் ஆதரிப்போம். மேலும் அவர் அரசியலில் நுழைந்தால் கூட எங்களுடைய ஆதரவு முழுமையாக இருக்கும்.

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இரு சக்கர பேரணி மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் 44 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

மேலும் குழந்தை களுக்கு பாலியல் குற்றம் தற்போதைய சூழலில் அதி்கரித்து கொண்டு வருகிறது இதை கண்டித்தும் விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது. என்றார்.

About Admin

Check Also

POPULAR SINGER SONU NIGAM TO JUDGE THE 6th EDITION OF BIG FM’s AWARD-WINNING ON-AIR SINGING TALENT SHOW ‘BENADRYL BIG GOLDEN VOICE’

Chennai,2018: BIG FM, one ofthe India’s largest radio networks, has announced the sixth season of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.