கோவை தொண்டமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை தொண்டாமுத்தூர் பகுதியில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மேலும் ஒரு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்வபுரம் நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பேரூர் LIC காலனி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதிய வாகனம் ஒன்று நிற்காமல் சென்ற நிலையில் அம் முதியவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அதை கண்ட அமைச்சர் எஸ். பி வேலுமணி உடனடியாக தனது காரை நிறுத்தி கீழே இறங்கி அம்முதியவரை தூக்கி முதலுதவி சிகிச்சை அளித்ததுடன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி [email protected] [email protected]