Friday , February 22 2019
Home / District-News / கோவையில் பிரமிப்பூட்டும் ஜம்போ சர்க்கஸ் 15-ந் தேதி துவக்கம்.

கோவையில் பிரமிப்பூட்டும் ஜம்போ சர்க்கஸ் 15-ந் தேதி துவக்கம்.



கோவையில் பிரபல ஜம்போ சர்க்கசின் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் வருகிற 15-ந் தேதி துவங்குகிறது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஷாஜிலால் கூறியதாவது :
ஜம்போ சர்க்கஸ் தனது புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் தனித்துவம் பெற்றுள்ளது.

கோவையில் ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் ஆப்பிரிக்கன் யோகா, ரோலர் ஆக்ட், ஸ்பிரிங் நெட், ஸ்லின்சிங் அக்ரோபாட், ரோப் பாலன்ஸ், குதிரை விளையாட்டு, கிளிகளின் சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன.

கோவையில் வருகிற 15-ந் தேதி ஜம்போ சர்க்கஸ் துவங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறும்.தினமும் மதியம் 1 மணி,மாலை 4 மணி,இரவு 7 மணி என 3 காட்சிகளுக்கு கட்டணமாக ரூ.100,ரூ.150,ரூ.200 ,ரூ.300 கட்டணமாகும்.

எப்போதும் மக்களைக் கவர்ந்து வரும் சர்க்கஸ் தொழில் தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் மைதானம் மற்றும் மின்சாரத்திற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சர்க்கஸ் தொழிலையும் அதன் கலைஞர்கள் மற்றும் ஊழியர்களையும் கருத்தில் கொண்டு சலுகைகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது உடன் செல்வராஜ்,எம்.பவித்தரன்,சுபா சுப்ரமணியம் ஆகியோர் இருந்தார்கள்

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected] [email protected]

About Admin

Check Also

ஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.