கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய முறை கற்பித்தல் பயிற்சி வழங்கப்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸில் பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரி அமெரிக்காவிலுள்ள கல்சுரல் ஏஜெண்டுடன் இணைந்து பிரிடெக்ஸ்டு என்ற புதிய முறையிலான கல்வி பயிற்றுவிக்கும் பயிற்சியை அளித்தது.
இதில் சுமார் 20 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்.
இந்தப் பயிற்சியில் மாணவர்கள் படிப்பின் மீது இதிக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மற்றும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் பயிற்சியளிக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி பாரிலாரா, ஜான்விசிங் ஆகியோர் பயிற்சியளித்தார்கள்.
கல்லூரி வளாகத்தில் நடந்த இதற்கான துவக்க நிகழ்ச்சிக்கு தலைவர் பேராயர் தீமத்தேயு ரவீந்தர் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் செயலர் மிர்ணாளினி டேவிட் அனைவரையும் வரவேற்க,முனைவர் ஜெமீமா வின்ஸ்டன் நன்றியுரை வழங்கினார்.
கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

Reporter