Wednesday , October 17 2018
Home / District-News / தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வாடிக்கையாளர் முகாம்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வாடிக்கையாளர் முகாம்.


கோவையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு முகாம் நடந்தது.

கோவை ஆருத்ரா ஹாலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வாடிக்கையாளர்கள் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடந்தது. இந்த முகாமினை மண்டல மேலாளர் எம்.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொது மேலாளர் டி.கிருபாகரன் பேசியதாவது :
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் படித்த இளைஞர்கள் முதல் தலைமுறைத் தொழில் முனைவராக உருவாவதற்கு உதவும் வகையில் நீட்ஸ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதில் உற்பத்தித் தொழில்கள் சேவைத் தொழில்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரைகடன் வழங்கப்படும்.

இந்தக் கடன் தொகைக்கு 25 சதவிகிதம் மூல தன மானியம் மற்றும் 3 சதவிகித வட்டி மானியமும் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்திற்கு பட்டதாரிகள் டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் பொதுப் பிரிவினர் 35 மிகாதவர்களாகவும் சிறப்புப் பிரிவினர் 45 வயதிற்க்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மாத கால பயிற்சியும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் கூட்டத்தில் குறிச்சிக் கிளை மேலாளர் எஸ்.ராஜேந்திரன்,முதுநிலை மேலாளர் பி.மோகன்,எம்.ஜாக்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]

Rukmani
Reporter

About Admin

Check Also

கீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற,  வாக்காளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.