Wednesday , June 26 2019
Home / District-News / சர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி.

சர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி.



ஜெர்மனியில் நடந்த சர்வதேச அளவிலான குதிரையேற்றப் போட்டியில் கோவை வீரர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

இது குறித்து பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது.
இந்திய வரலாற்றில் குதிரையேற்றம் குறித்த பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. மும்பை, டில்லி, கோவை உள்ளிட்ட நகரங்களில் குதிரையேற்றப் பயிற்சி பெறுவோர் அதிகரித்தவண்ணம் உள்ளார்கள்.

ஜெர்மனியில் கடந்த மே மாதம் சர்வதேச அளவிலான குதிரையேற்றப் போட்டிகள் நடந்தது.

சர்வதேச அளவில் 120-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற போட்டியில் கோவை அலெக்ஸாண்டர் பயிற்சி மன்றத்தைச் 3 வீரர்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் 10-16 வயதினர் பிரிவில் அஸ்வின் 6-வது இடத்தையும், கைலாஷ் 7-வது இடத்தையும் மற்றும் தரனிஷ் சிறப்பான திறன்மிக்க வீரர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தக் குதிரையேற்றப் போட்டியில் மாணவர்கள் குதிரை வகைகளை கையாளும் முறை பற்றிய பாடங்கள், தடை தாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பல்வேறு வகையான குதிரைகளைக் கையாண்டு சவாலான போட்டிகளில் வீரர்கள் வெற்றியுடன் கோவைக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

The Ulaga Mahaajothi Thavapeedam Arakattalai trust planted 1000 trees

The Ulaga Mahaajothi Thavapeedam Arakattalai trust, headed by Chithar Adimai Konibaba on Sunday held an …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.